2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி?
2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி?
இன்னும், இரண்டு ஆண்டுகள் கழித்து புழக்கத்துக்கு வரவேண்டிய, 500 ரூபாய் நோட்டுகள், இப்போதே கிடைப்பதால், பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், '2018'ம் ஆண்டு என அச்சிடப்பட்ட, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையை அணுகியபோது, 'இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், '2018' என குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது, 2016ம் ஆண்டு நடந்து வரும் நிலையில், 2018ம் ஆண்டுக்கான நோட்டுகள் எப்படி புழக்கத்தில் வந்தன என்பது குறித்து, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவை, கள்ள நோட்டுகளா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.