பிளஸ் 2 மறு மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி


பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியானது. மதிப்பெண் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்
த பின், விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது.

'நகலில் மதிப்பெண் குறைந்தது தெரியவந்தால், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.நேற்று முதல், விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது. விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். மாணவர்கள், scan.tndge.in என்ற இணையதள முகவரியில், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்கள் பகுதி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Popular posts from this blog