ஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு தொடக்கம்
ஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு தொடக்கம்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன
புதுச்சேரி சென்டாக் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்டாக் தரவரிசைப்பட்டியல் வெளியீட்டுக்கு பின் அவர் கூறியதாவது:
பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் மொத்தம் 385, காரைக்கால் பிகேஐடி கல்லூரியில் 174, 17 தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 4129 பொறியியல் பாடப்பிரிவுகள் இடங்கள் உள்ளன.
மாணவர்கள் வேறு பாடப்பிரிவுகளில் தங்கள் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசின் கீழ் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி, அகில இந்திய பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் 49-வது இடத்தில் உள்ளது.
இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. நடப்புக் கல்வியாண்டில் இக்கல்லூரி புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற மத்திய அரசு அனுமதி தந்துள்ளது என்றார்.