நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள்ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்.


          தமிழக நீதித்துறையில், ஒட்டு மொத்தமாக, 3,600 காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, 38 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்; 37 இடங்கள் காலியாக உள்ளன.கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, மாவட்ட நீதிபதி, மாஜிஸ் திரேட், சிவில் நீதிபதிகள் என, 1,015 பணி யிடங்களில், 969 பேர் தான் பணியில் உள்ளனர்.

46 பணியிடங்கள் காலி:

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் தனி உதவி யாளர்கள், நீதிமன்ற அதிகாரிகள், துறைஅதிகாரிகள், உதவி அதிகாரிகள், உதவியாளர்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 2,062 பணியிடங்கள் உள்ளன. மதுரை கிளையில், 716 பணியிடங்கள் உள்ளன.அனுமதிக்கப்பட்ட இந்த பணியிடங்களில், 2,139 பேர் தான்பணியில் உள்ளனர். சென்னை உயர் நீதி மன்றம், மதுரை கிளையை சேர்த்து, 639 பணி யிடங்கள் காலியாக உள்ளன. கோவை,மதுரையில் உள்ள ஜுடிசியல் அகாடமியிலும், தலா, 15 இடங்கள் என, 30 இடங்கள் காலியாகவே இருக்கின்றன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அதிகாரிகள் அளவிலான பதவிகளாக பதிவாளர்கள், துணை பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள் என, மொத்தம், 119 பதவிகள் உள்ளன. அவற்றில், 101 பேர் பணியில் உள்ளனர். மீதி இடங்கள் காலி.கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, 32 மாவட்டங்களிலும்உள்ள நீதிமன்றங்களில், 17 ஆயிரத்து, 822பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 14 ஆயிரத்து, 859 பேர் தான் பணியில் உள்ளனர். 2,963 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை.சென்னையில் மட்டும், சிவில் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களில், 280 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒட்டு மொத்தமாக பார்த்தால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில், 3,651 பணியிடங்கள் காலியாக உள்ளன.அதாவது, 15 சதவீதத்துக் கும் மேல் காலியிடங்கள் உள்ளன. பணியாளர் கள் காலியிட விவரங்கள், உயர் நீதிமன்ற ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.நீதித்துறையில், பணியாளர்கள் பணியிடங் களை காலியாக வைத்திருக்காமல், உடனடி யாக நிரப்ப, உயர் நீதிமன்ற பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank