4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு.


பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், பல கல்லுாரிகளில், இரண்டு வித பட்டப் படிப்புகள் ஒரே
முறையில் கற்றுத் தரப்படுகின்றன.

உதாரணமாக, சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., படிப்புடன் எல்.எல்.பி.,யும் சேர்த்து, ஐந்து ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது. இதே படிப்பை தனித்தனியாக படித்தால், ஆறு ஆண்டுகளாகும். ஆனால், இரண்டையும் இணைத்து படிக்கும்போது, ஒரு ஆண்டு குறையும்.இதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நேரடியாக பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என, ஒருங்கிணைந்த, நான்கு ஆண்டுகள் படிப்பாக நடத்த, பல ஆசிரியர் கல்வியியல் பல்கலைகள் முயற்சித்தன. ஆனால், 'பி.ஏ., - பி.எஸ்சி., போன்றவை கலை, அறிவியல் படிப்பாக இருப்பதால், அதை கல்வியியல் கல்லுாரி அங்கீகார விதியின் படி கற்பிக்க முடியாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி மறுத்தது.இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லுாரி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், 'ஒருங்கிணைந்த பி.ஏ., -- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி, தேசிய ஆசிரியர்கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம்.எனவே, நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனுவை பரிசீலிக்க ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவுப்படி, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'எந்த கல்லுாரியிலும், நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புக்கு, தமிழக கல்வியியல் பல்கலை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏதாவது கல்லுாரி, நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்பு நடத்துவதாக விளம்பரம் மற்றும் அறிவிப்பு செய்தால், அந்த கல்லுாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank