ஆசியாவின் அழகான 50 இடங்கள் பட்டியலில் தாஜ்மகாலுக்கு இடம்
ஆசியாவின் மிகவும் அழகான 50 இடங்களின் பட்டியலில் தாஜ்மகால் இடம் பிடித்துள்ளது.
ஹனோய்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் இதழ் ஒன்று ஆசியாவின் மிகவும் அழகான 50 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலும் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பிரபலமான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது.
358 ஆண்டுகால பழைமை வாய்ந்த இந்த சலவைக்கல் அதிசயத்தை பார்வையிட ஆண்டுதோறும் ஆக்ராவிற்கு 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இக்கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
பீஜிங்கின் போர்பிடன் நகரம், சீனப் பொருஞ்சுவர், திபெத்தின் லாசா ஆகியவையும் ஆசியாவின் 50 அழகான இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.