பி.சி., - எம்.பி.சி., பிரிவுக்கு இன்று கலந்தாய்வு : 530 எம்.பி.பி.எஸ்., இடம் இருக்கிறது


            மருத்துவ படிப்பில், பொது பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், இன்று, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 


              அரசிடம், 530 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது. மூன்று நாட்கள் நடந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, நேற்றுடன் முடிந்தது. நேற்று, 722 பேர் பங்கேற்றதில், 519 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டன.அரசு கல்லூரிகளில், 225; சுய நிதி கல்லுாரிகளில், 233; இ.எஸ்.ஐ., கல்லுாரியில், 15 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களையும், அரசு பல் மருத்துவ கல்லூரியில், 46 பேர், பி.டி.எஸ்., படிப்பையும் தேர்வு செய்தனர்.
மீதி உள்ள இடங்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லூரியில், 530; சுய நிதி கல்லூரிகளில், 201, இ.எஸ்.ஐ., கல்லூரிகளில், 25 இடங்கள் உள்ளன; 36 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்று, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு, நாளை நிறைவடைகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)