6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!
ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!
பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் ப
ங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.
நேர்காணல்சென்னை, பெங்களூரு,கவுகாத்தி, காரக்பூர், டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,க்களில் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்த, வணிக நிறுவனங்களுக்கு, அகில இந்திய ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி அனுமதி அளிக்கும்.
இந்த அனுமதி படியே, ஐ.ஐ.டி., நிர்வாகம் அனுமதி வழங்கும்.கடந்த ஆண்டு நேர் காணலுக்கு வந்த நிறுவனங்களில், பிலிப்கார்ட், ரோட் ரன்னர் போன்ற நிறுவனங்கள், வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்த பின்,
ஒப்பந்தங்களை மீறியதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, பிலிப்கார்ட் நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர்களை தேர்வு செய்து, 'அவர்கள் ஜூன் முதல் பணியில் சேரலாம்' என்று கூறி, சம்பள ஒப்பந்தமும் அளித்தது.
ஆனால், ஒப்பந்தத்தைமீறி, 'தேர்வான மாணவர்கள் டிசம்பரில் வேலைக்கு சேர்க்கப்படுவர்; ஒப்பந்தத் தில் கூறிய தொகையை விட குறைவான சம்பளமே தர முடியும்' என்று கூறிய தால், மாணவர்கள் பணி வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, ரோட் ரன்னர் நிறுவனமும், 'தேர்வு செய்த மாணவர்களை, தற்போது வேலைக்கு சேர்க்க முடியாது' என, பணி வாய்ப்பை தள்ளி போட்டது. இன்னும் சில நிறுவனங்கள், தாங்கள் பேசிய சம்பளத்தை தராமல், குறைந்த சம்பளம் தருவதாகக் கூறின. இதுகுறித்து, மாணவர்கள் தரப்பில் ஐ.ஐ.டி.,யில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐ.ஐ.டி.,யின் வேலைவாய்ப்பு அனுமதி கமிட்டியின் ஆலோசனை கூட்டம், பெங்களூரில் நடந்தது.இதில், சென்னை ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி இயக்குனர் பாபு விஸ்வ நாதன் பங்கேற்று, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து அறிக்கை அளித்தார். இதேபோல், மற்ற ஐ.ஐ.டி.,க்களிலும் இந்த நிறுவனங்களின் ஒப்பந்த மீறல் குறித்து அறிக்கை
தரப்பட்டது.
அனுமதி ரத்து:இதையடுத்து, பிலிப்கார்ட் நிறு வனத்துக்கு இந்த ஆண்டு மட்டும் நேர்காணலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரோட் ரன்னர் உட்பட, மூன்று நிறுவனங்கள், நேர்காணலில் பங்கேற்ற வர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கா ததால், அடுத்த ஆண்டு வரை நேர்காணலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற, இரண்டு நிறுவனங்களும் ஆட்களை எடுத்துக் கொள்வதாகக் கூறியதால், அவர்களுக் கும் இந்த ஆண்டு மட்டும் வளாக நேர்காணலில் பங்கேற்கஅனுமதி ரத்து செய்யப்பட்டு, தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளன.