AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு.


     அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.


            இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண AIIMS இணையதளத்தில் தேர்வரின் பெயர் மற்றும் நுழைவுத்தேர்வு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பல்வேறு இடங்களில் உள்ள 7 AIIMS நிறுவனங்களில் 672 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022