ஒருங்கிணைந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு தமிழக அரசால் உயர்த்தப்படுமா???

தமிழ்நாடு காவல் துறையில் இனி வரும் இரண்டாம் நிலை காவலர்கள் (GR.2 POLICE, JAIL WARDER, FIREMAN ) ஒருங்கிணைந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு தமிழக அரசால் உயர்த்தப்படுமா???

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள பாளையம்
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு
காவலர்கள் ஒருங்கிணைந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பை அனைத்து
பிரிவினருக்கும் (OC/BC/BCM/MBC/SC/SCA/ST) மூன்று (3) ஆண்டுகள்
உயர்த்த வேண்டுமென முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL)
அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு: 
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!
கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு காவல் துறையில் GR.2,POLICE CONSTABLE
ஆட்கள் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அதனால் தமிழகத்திலுள்ள
பல்லாயிரம் இளைஞர்களின் காவலராகும் கனவு நிறைவேறவில்லை.அவர்களில்
பெரும்பான்மையோர் காவலர்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதை
தாண்டிவிட்டதால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக உள்ளனர். எனவே
இனி வரும் தமிழ்நாடு அரசின் காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது
தகுதியை (வயது வரம்பை) அனைத்து பிரிவினருக்கும் மூன்று ஆண்டுகள் உயர்த்தி
வழங்க வேண்டும்.அதாவது OCக்கு 18லிருந்து24வரை உள்ள வயதை 18லிருந்து27
ஆகவும் , BC/BCM/MBCக்கு 18லிருந்து26வரை உள்ள வயதை 18லிருந்து29 ஆகவும்
, SC/STக்கு 18லிருந்து29வரை உள்ள வயதை 18லிருந்து32 ஆகவும் , உயர்த்தி
வழங்க உத்தரவிட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அம்மாவை இருகரம் கூப்பி
வணங்குகிறேன்.அவ்வாறு உயர்த்துவதால் இளைஞர்களின் வாழக்கையிலும்
,அவர்களின் குடும்பங்களிலும் ஒளியேற்றப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)