டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் விரைவில் துவக்கம்.


'தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர்
ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம், ஜூன், 27ம் தேதி, www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும், அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும், ஜூலை, 4ம் தேதிமுதல், 9ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட மையங்களான, 'டயட்' அலுவலகங்களில் நடக்கும்.

ஆங்கிலம், தெலுங்கு, உருது, சிறப்பு பிரிவினருக்கு, ஜூலை 4; தொழிற்பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும், ஜூலை 5; தொழிற்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 7; கலைப்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 8; அறிவியல் பிரிவு மாணவியருக்கு, ஜூலை, 9ம் தேதியில் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)