உங்க வாட்ஸ்அப்பில் இதெல்லாம் இருக்கா? புதிதாக சேர்க்கப்பட்ட ஃப்யூச்சர்ஸ்

மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர். தொடர்ந்து பல புதிய ஃப்யூச்சர்களை சேர்த்து வரும் வாட்ஸ்அப் தற்போது மேலும் தனது சேவையை சிறப்பாக்கியுள்ளது.அதாவது, வாட்ஸ்அப்பில் நாம் பதிவு செய்யும் எழுத்தை இனி போல்ட், இட்டாலிக், ஸ்டிரைக் அவுட் செய்யலாம்.

எப்படி என்றால்...

ஒரு வார்த்தையை போல்ட் செய்ய, அந்த எழுத்துக்கு முன்னும் பின்னும் '*' என சேர்க்க வேண்டும். உதாரணமாக  *Happy* என பதிவு செய்தால் போல்டாக தெரியும்.அதே போல ஒரு வார்தையை இட்டாலிக்கில் மாற்ற '_' அன்டர்லைனைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக  _Happy_ என பதிவு செய்தால் இட்டாலிக்கில் பார்க்கலாம்.ஸ்டிரைக்அவுட் அதாவது Happy  என பார்க்க வேண்டும் என்றால் அதற்கு '~' என்ற சிம்பலைப் பயன்படுத்தவும்.

 உதாரணமாக ~Happy~.அடுத்து...வாட்ஸ்அப்பில் இனி வேர்ட் மற்றும் பிடிஎப் ஃபைல்களையும் அட்டாச் செய்யலாம். லீவ் லெட்டர் முதல், காதல் கடிதம் வரை... வினாத்தாள் முதல், விடைத்தாள் வரை அனைத்தையும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளலாம்.இனி வாட்ஸ்அப்பை டெஸ்க்டாப் மற்றும் வெப் ஆப்பாகவும் பயன்படுத்தலாம். போனை சார்ஜ் செய்யும் வரை அதனை உங்கள் கம்ப்யூட்டரில் பார்த்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் உள்ள பைல்களை நேராக இழுத்து டெஸ்க்டாப்களில் சேமித்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் கீபோர்டில் இருந்தே சாட் செய்யலாம்.லொகேஷன் சென்டர்உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளுக்கு, வீடு எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்க எளிதாக லொகேஷன் சென்டர் என்ற ஃப்யூச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் உள்ள இந்த லொகேஷன் ஐகானை அனுப்பினால் போதும்.வாய்ஸ் கால்ஸ் என்ற சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது... இது போனில் பேசி உங்களது டாக் டைம் குறையாமல், வெறும் இன்டர்நெட் சேவையின் மூலமாகவே பேசிக் கொள்ள உதவும். சர்வதேச அளவில் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல அதிக அளவில் உதவும்.இது தற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப்பில் இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு அல்லது இன்னும் ஒரு சில நாட்களில் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்பில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)