திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி:

திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் காலியாக உ
ள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

அப்பதவிக்கு கீழ்க்கண்ட தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் (உரிய சுய சான்றொப்பத்துடன்) இணைத்து தபால் மூலம்  கீழே   குறிப்பிடப்பட்ட   உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்,   சான்றிதழ்களின்  சாரிபார்த்தலின்  அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கான அடுத்த கட்டத்தில் பங்கேற்க இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி விதி 16(a)(1)ன்படி முற்றிலும் தற்காலிமானது.
விளம்பர எண்.47,2016,001   தேதி: 08,06,2016
பதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - IIIகாலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
கல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கணினி இயக்குபவர் (Computer Operator)காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
கல்வித்தகுதி: கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றும் கணினி பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர்காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர்காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர்காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 08.06.2016 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:24.06.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620 001
விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ecourts.gov.in/tn/tiruchirappalli என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படமாட்டாது.
மேலும் விவரங்கள் அறியhttp://ecourts.gov.in/sites/default/files/Recruitment2016%20Notification.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)