ஐ.டி.ஐ., சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 461 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்;
22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில், ஒவ்வொரு ஆண்டும், 'பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், வெல்டர், மெக்கானிக் டீசல், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெய்லர்' ஆகிய தொழிற்பிரிவுகளில், 30 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, நேற்றுடன் முடிந்ததை, ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள், தமிழகத்தில் எந்த ஐ.டி.ஐ., நிறுவனத்திலும் சேரலாம்.