ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பிழையின்றி பதிவு செய்ய நடவடிக்கை
ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பிழையின்றி பதிவு செய்ய நடவடிக்கை : ஸ்கேனிங் முறை அறிமுகம்
நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்களை பெறுவதற்கு ஸ்கேனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் தற்போது குடும்ப அட்டைதாரரர்களிடம் ஆதார் எண்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கும், ஆதார் எண்களை பிழையில்லாமல் பெறுவதற்கும் முதற்கட்டமாக 12,000 நியாய விலைக் கடைகளில் ஸ்கேனர்கள் மூலமாக ஆதார் எண்களை பெறும் பணி துவங்கியுள்ளது.
இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அளிக்கும் ஆதார் எண்களை பிழையில்லாமல் பதிவு செய்ய முடியும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2009ம் ஆண்டிலிருந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்காமல் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகவே குடும்ப அட்டைதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது.