சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை தமிழ்வழியில் படிக்க வாய்ப்பு.


           பள்ளிகளில் நேரடியாக படிக்க முடியாதவர்களுக்கான, தேசிய திறந்தவெளி பள்ளி கல்வி நிறுவனமான, என்.ஐ.ஓ.எஸ்., இந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பில், தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது.


               பள்ளி கல்வியை தொடர முடியாதவர்கள், என்.ஐ.ஓ.எஸ்., மூலம், பள்ளி கல்வியை தொடரலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில், பள்ளி கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரியம் வழங்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களுக்கு இணையான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.என்.ஐ.ஓ.எஸ்., மூலம் பள்ளி கல்வியை நிறைவு செய்த மாணவர்கள், பிரபல கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்காக, இந்த ஆண்டு முதல், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல்,பொருளாதாரம், தொழிற்கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கணக்கியல், ஓவியம், கணினிதட்டச்சர் ஆகிய பாடங்களை, தமிழில் கற்க வசதி செய்யப்பட்டுள்ளது; மாணவர்கள், தமிழில் தேர்வும் எழுதலாம்.மாணவர்கள் ஏதாவது, நான்கு பாடங்களை தேர்வு செய்து, அதனுடன், ஒன்று அல்லது இரண்டு மொழிப் பாடங்களை பயில்வதின் மூலம், 10ம் வகுப்பு சான்றிதழை பெறலாம்.

நடப்பு, கல்வி ஆண்டிற்கான தமிழ்வழி கல்வியில் சேர, தேசிய திறந்தவெளி பள்ளி கல்வி நிறுவன இணையதளமான, www.nios.ac.inல் விண்ணப்பிக்கலாம். 2017 ஏப்ரலில் நடக்கும் தேர்வில், இந்த மாணவர்கள் பங்கேற்கலாம். இது குறித்த கூடுதல் தகவலுக்கு, 044 - 2844 2237 / 39 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank