மாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்!

மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது . தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது.


அவ்வப்போதுசமச்சீர் கல்வி கமிட்டி பரிந்துரைப்படி, காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு, ஐந்தாண்டுகளுக்கு மேலாக, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை.
இதனால், தமிழக மாணவர்கள், அகில இந்திய அளவில், ஜே.இ.இ., என்ற பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு; &'நீட்&' எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு போன்றவற்றில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம், மாநிலங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும், இந்தஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, மாநில மாணவர் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுத வேண்டும்.
அதேபோல, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை அனைத்து இன்ஜி., கல்லுாரிகளுக்கான பொது நுழைவுத்தேர்வாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகார கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வு செய்து வருகிறது.
ஆய்வு நடக்கிறதுஇதற்கிடையில், பெங்களூரு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில், பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவது குறித்து ஆய்வு நடக்கிறது. அவ்வாறு வரும் போது, அனைத்து மாநிலங்களும், குறிப்பாகநுழைவுத்தேர்வில் இதுவரை பங்கேற்காத மாநிலங்களும், பாடத்திட்டங்களை மாற்றி, தரம் உயர்த்த வேண்டியுள்ளது. இல்லை யென்றால், அந்த மாநில மாணவர்களுக்கு, வாய்ப்பு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என, தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பாடத்திட்டங்களை மாற்றி, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, மாநில பள்ளிகளிலும் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இப்போதே பாடத்திட்டம் மாற்றுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2015ல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள், 5,930 பேர்
ஆந்திராவில், 793 மாணவர்கள்
தெலுங்கானாவில், 300 மாணவர்கள்
மஹாராஷ்டிராவில், 678 பேர்
தமிழக சமச்சீர் கல்வியில், 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)