விண்ணப்பம் நகல் எடுப்பதில் பிரச்னை இன்ஜி., கவுன்சிலிங்கில் தீராத குழப்பம்.


அண்ணா பல்கலை யில் இன்ஜி., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் முடிந்து விட்டது. எனினும், தொழில்நுட்ப பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அவகாசம் தர கோரிக்கை எழுந்து உள்ளது.தமிழகத்தில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்பில் முதலாம் ஆண்டு
மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல குளறு படிகள் ஏற்பட்டுள்ளதால், பல மாணவர்களும், பெற்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆன்லைன் பதிவு துவங்கிய நாள் முதலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அந்த குழப்பம் இறுதி நாள் வரை தீராததாகவே இருந்தது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பின்னரும் அவர்களின் கட்டணம், பல்கலையால் ஏற்றுக் கொள்ளப்பட பல நாட்கள் தாமதமானது. அதனால், விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் பதிவேற்றும் வசதி முடங்கியது.

அதேபோல், பல மாணவர்களுக்கு அவர்கள் பணம் கட்டி விண்ணப்பித்த போதும், இணையதள பக்கத்துக்கான, 'யூசர் ஐ.டி.,'யான பயன்பாட்டு அடையாள வார்த்தையும், அதற்கான, 'பாஸ்வேர்டு' எனப்படும், ரகசிய குறியீட்டு எண்ணும், சரியாக இருந்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.அதனால், தங்கள் விண்ணப்பத்தை நகல் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலர்,குறை கேட்பு தொலைபேசிக்கும், மாணவர் சேர்க்கை செயலருக்கும் தொடர்பு கொண்ட போதும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை.மேலும், அண்ணா பல்கலைஅறிவித்த, 'இ - மெயில்' முகவரிக்கு புகார் அனுப்பியும் பலன் இல்லை. பலர் நேரில் சென்று விசாரித்த போதும், ஒவ்வொரு பிரிவாக அலைக்கழித்த அதிகாரிகள், இறுதி வரை பிரச்னைக்கு தீர்வை வழங்கவில்லை.எனவே, பிரச்னைகளை தீர்க்காமலே அண்ணா பல்கலைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. 

இதனால், ஆன்லைனில் பதிவு செய்தும், விண்ணப்பம் நகல் எடுக்க முடியாதவர்கள், என்ன செய்வதெனதெரியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு, 'பணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்ற பதில் மட்டும், இ - மெயிலாக கிடைத்துள்ளது. ஆனால், விண்ணப்பத்தை நகல் எடுக்க வசதி செய்யப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், விண்ணப்பங்களை நகல் எடுக்கவும், அவற்றை பெறவும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)