நியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை


யு.ஜி.சி., சார்பில், அதன் இணை செயலர் கே.பி.சிங், அனைத்து பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன் விவரம்: 
அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், அ
னைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை நடத்தும் போது, இடஒதுக்கீடு முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்; விதிமீறல்கள் இருக்கக் கூடாது.

அதேபோல், பேராசிரியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனங்களிலும், அதேபோன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் இனத்தவருக்கு, 15 சதவீதம்; பழங்குடியினருக்கு, 7 சதவீதம்; மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் என்ற இடஒதுக்கீடு கொள்கையை, கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)