கல்லூரி பேராசிரியர்களுக்கு இனி சொகுசு பணி கிடையாது
உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை அனுப்பும்படி பல்கலை மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மூலமும்; பல்கலைகள், பல்கலை மானிய குழுவான
யு.ஜி.சி., மூலமும் நிர்வகிக்கப்படுகின்றன. பேராசிரியர்களின் பணி நியமனம், சம்பளம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை, கல்லுாரி, பல்கலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கு, யு.ஜி.சி., யிலிருந்து நிதி வழங்கப்படுகிறது.
ஆனால், உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் குறைந்த நேரமே பணியாற்றுவதாகவும்; உயர்கல்வியின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்
என்றும் பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டத்துக்கு பின், பேராசிரியர் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி உதவிப் பேராசிரியர்கள் வாரத்திற்கு 16 மணி நேரத்துக்கு பதில் 18 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என மாற்றம் வர உள்ளது. இதேபோல் பேராசிரியர்
களுக்கும் வேலை நேரம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.