எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்று கடைசி


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற திங்கள்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும்.


23,400-க்கும் மேற்பட்டோர்...:

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கடந்த மே 26-ஆம் தேதி முதல்தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.கடந்த 10 நாள்களில் மொத்தம் 23,400-க்கும் மேற்பட்டோர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் திங்கள்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெறலாம்;சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org  மூலமும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க நாளை கடைசி: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்குவந்து சேர செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) கடைசி நாளாகும். இதுவரை 14,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.

விண்ணப்பத்துடன்சான்றொப்பம் இட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணைத்து அனுப்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் வரும் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)