கால்நடை படிப்பு ஜூலை முதல்வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
கால்நடை படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூலை முதல்வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆ
யிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்களை பரிசலீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை முதல் வாரத்தில்தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.