அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளில் (MBBS, B.D.S, B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T ) சேர ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016-17 ஆண்டுக்கான மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளில் சேர ஆன்லைன் (Online) மூலம் 8-6-2016 முதல் 20-6-2016 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 ஆகும். பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஒடி ( B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T)உள்ளிட்ட படிப்புகளில் சேர இன்று 8-6-2016 முதல் 24-8-2016 வரை ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.800 ஆகும்.மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக அரசின்இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் தமிழகஅரசின் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் பதிவு செய்ய மற்றும் விபரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதளம்: www.annamalaiuniversity.ac.in, மின்னஞ்சல்: auadmission2016@gmail.com மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank