மின்சார வாரிய நேரடி பணி நியமனத்துக்கான 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மின்சார வாரிய நேரடி பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு 19-ஆம் தேதி நடக்கிறது: இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

          தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்குரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் மே 22-இல் நடைபெற இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன.
 இந்த நிலையில்,  தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-இல் நடைபெறவுள்ள தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (ஹால் டிக்கெட்) www.tangedcodirectrecruitment.in, tangedco.directrecritment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கூடுதல் விவரங்களுக்கு  044- 2235 8311, 2235 8312 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022