ஊரக வளர்ச்சி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நாகை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகு அரசுத்தலைப்பில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து ஜூன் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது:
நாகை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகு அரசுத்தலைப்பில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம், முன்னாள் ராணுவத்தினால், தாய், தந்தை இழந்தவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு ஆகியோருக்கு முன்னுரிமை)(முஸ்லிம் தவிர) விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து தனியே தெரிவிக்கப்படும்.
வயது வரம்பு 2015 ஜூலை 1 ஆம் தேதி குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 32 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்பப் படிவம் ஏதும் வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமைக்கான நகலையும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை ஜூன் 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.