DTEd Admissions starts from July 4


         நாகை மாவட்டம், குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை ஜூலை 4-ஆம் தேதி இணையவழியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குருக்கத்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆர். சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2016-17-ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு  மாணவர் சேர்க்கை இணையவழி ஒற்றை சாளர முறையில் நடைபெறவுள்ளது.
இந்த ஒற்றை சாளர முறையிலான சேர்க்கை, ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)