கோ-ஆப்டெக்ஸில் 100 உதவி விற்பனையாளர்கள் நியமனம்: போட்டித்தேர்வு மூலம் பணி


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் உதவி விற்பனையாளர் பணியில் 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. 

இப்பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 33 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.உதவி விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் www.cooptex.gov.in இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் இதர ஆவணங்களுடன் ஜூலை 25-ம் தேதிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமைஅலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, பணிநியமனம், இடஒதுக்கீடு வாரியாக காலியிடங்கள் உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் விவரங்களை கோ-ஆப்டெக்ஸ் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். உதவி விற்பனையாளர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு சம்பளம் ரூ.11,500 வழங்கப்படும். அதோடு வருங்கால வைப்புநிதி (இபிஎப்), பணிக்கொடை உள்ளிட்ட இதர சலுகைகளும் உண்டு. இந்த தகவல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank