ஜூலை 12, 13 தேதிகளில் வங்கிகள் செயல்படாது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எ
டுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு நேற்று டில்லியில் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், வங்கி நிர்வாகங்கள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் மற்றும் கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகள் ஜூலை 12ம் தேதியும் மற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஜூலை 13 ம் தேதியும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.