சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்


சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.

23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி 16-இல் சமூக அறிவியல், 18-இல் மொழிப் பாடங்கள், 19-இல் தொடர்பு ஆங்கிலம், ஆங்கிலம், 20-இல் அறிவியல், 21-இல் ஹிந்தி, 22-இல் கணிதம், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு,
23-இல் சம்ஸ்கிருதம், பஞ்சாபி, ஓவியம், தகவல் தொடர்பியல், சுற்றுலா அறிமுகம் என தேர்வுகள் நடைபெறவுள்ளன. தனித் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலேயே செய்முறைத் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகள் ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் வெளியிடப்படும். விவரங்களுக்கு தேர்வு மையப் பள்ளி முதல்வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cbse.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022