3 சூரியன் கொண்ட விசித்திர கிரகம்: விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.


        அண்டவெளியில் 3 சூரியன்கள் கொண்ட விசித்திர உலகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மூன்று முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நிகழ்வதால் மனிதர்களின் ஆயுள் அதிகமாக இருக்கலாம் எ
ன்றும் அனு மானித்துள்ளனர்.

            அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்ட வெளியை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெச்.டி 131399ஏபி என்ற மிகப் பெரிய கிரகம் அண்டவெளியில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.  பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள அந்த கிரகத்தின் வயது சுமார் 1.6 கோடி ஆண்டு களாக இருக்கலாம் என்றும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இளம் கிரகங்களில், இதுவும் ஒன்று என்றும் அவர்கள் தெரி விக்கின்றனர். இது குறித்து அரிசோனா பல்கலைக்கழகத்தின் டேனியல் அபாய் கூறும்போது, ‘‘நேரடியாக காணும் சில கிரகரங்களில் இதுவும் ஹெச்.டி 131399ஏபி ஒன்று. இந்த கிரகத்தின் அமைப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது’’ என்றார்.
இந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் கெவின் வாக்னர் கூறும்போது, ‘‘கிரகத்தின் சுற்று வட்டப்பாதைகளும், நட்சத்திரங் களும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகத்தின் பாதி சுற்றுவட்டப் பாதையே பூமியின் 550 ஆண்டு களை கொண்டதாகவும், அதன் வானத்தில் 3 நட்சத்திரங்கள் மின்னுவதாகவும் அமைந்துள்ளன’’ என்றார். சிலியில் உள்ள மிகப் பெரிய தொலைநோக்கியில் பொருத்தப்பட் டுள்ள ‘ஸ்பெக்ட்ரோ போலாரி மெட்ரிக் ஹை கான்ட்ரஸ்ட் எக்ஸோபிளானெட் ரிசர்ச் இன்ஸ்ட்ரூமென்ட்’ (ஸ்பியர்) என்ற கருவி மூலம் அண்டவெளியில் இருக்கும் விசித்திரமான கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்துக்கு 3 சூரியன்கள் இருப்பதால் பருவத்துக்கேற்றபடி 3 சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவை நிகழ்வதாகவும், இதன் மூலம் அங்கு மனிதர்களின் ஆயுட் காலம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)