ஐந்து மாவட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தேனியில் ஆக.,3ல் துவக்கம்
தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெறுவதற்காக ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான தேர்வு போட்டிகள், தேனிமாவட்டத்தில் ஆக., 3ல் துவங்கி 9 வரை நடக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள்(இரு பாலரும்) பங்கேற்கவுள்ளனர்.
இவர்களில் 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கபடி, கூடைப்பந்து, எறிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் மாணவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ கூறுகையில், “ தேனி, கம்பம்,உத்தமபாளையத்தில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுவர்,” என்றார்