தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை ஆசிரி
யர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், பட்டூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். தமிழரசி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட புக்கத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கற்பகவல்லி, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அஞ்சூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சரசுவதி, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனகாபுத்தூர், அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.பரிமளம், மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலராகவும், கோவிலம் பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பழையநாப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.கே.கங்காதர ரெட்டி, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராகவும், ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜி.லில்லிபுஷ்பராணி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், அயப்பாக்கம், அரசு உயர்நிலைப் ்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எத்திராஜூலு, சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சிவ்வாடா அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இ.செந்தமிழ்ச்செல்வி, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை, அடையார் அடுத்த ஊரூர் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எடிசன், சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.