8,10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா: பயிற்சி உண்டு!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.
எந்தெந்த பிரிவில் பயிற்சி? :
பிட்டர், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெய்லர். நடக்கிறது கலந்தாய்வு மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், கலந்தாய்வில், தங்களுக்கு விருப்பமான தொழிற்பிரிவு மற்றும் விருப்பமான ஐ.டி.ஐ.,யை தேர்வு செய்யவும் வழி வகை செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தற்போது கலந்தாய்வு நடந்து வருகிறது.சென்னை மாவட்டத்தில் உள்ள, வட சென்னை அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்த கலந்தாய்வு மாணவர் சேர்க்கையை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், செயல்படும் நிலையங்கள்85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்22அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்22 அடிப்படை பயிற்சி மையங்கள்
யாருக்கு? : 8,10ம் வகுப்பு படித்தவர்களுக்குஎத்தனை பேருக்கு?30,000