8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.


          வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறதுபொதுத் துறை வங்கி
களில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 8822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

 ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு தற்போது புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.மொத்தம் 8 ஆயிரத்து 822 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கனரா வங்கியில் 2 ஆயிரத்து 200 இடங்களும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1350 இடங்களும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 899 இடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 இடங்களும், யூகோ வங்கியில் 540 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதர வங்கிகளிலும் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு உள்ளது. முழுமையான பணியிட விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணைய தளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-7-1986-ந் தேதிக்கு முன்னரும், 1-7-1996-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 13-8-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகுதி சரிபார்க்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே அவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:

விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் : 26-7-2016

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 13-8-2016

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 16, 22 மற்றும் 23-ந் தேதிகள்

முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 20-11-2016

பொது நேர்காணல் நடைபெறும் காலம் : ஜனவரி / பிப்ரவரி 2017

மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)