'ஆராய்ச்சி படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்' என, பல்கலை மானி
யக்குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது.
கல்வி திட்டங்கள் குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 'ஆராய்ச்சி படிப்பான பி.எச்டி., உட்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்' என, அனைத்து கல்லுாரிகள், பல்கலை களுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.