ஸ்மார்ட்போன்கள் வெடிக்குமா...?


          நவீன யுகத்தின் தொழில்நுட்ப அடையாளமாக மாறிப்போன ஸ்மார்ட்போன்கள் ரொம்பவும் ஆபத்தானவை. சார்ஜ் ஏற்றிய போது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது, போன் பேசியபடி சார்ஜ் செய்தபோது வெடித்து விட்டது...’ என ஸ்மார்ட்போன்க
ளை புதிதாக பயன்படுத்த ஆரம்பிப்பவர்களை பலர் பயமுறுத்துகிறார்கள்.

         இதற்கு காரணம் பேட்டரியின் அம்சங்களில் இருக்கும் ஒருசில குறைபாடுகள் தான். ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு. ஒன்று மோசமான பேட்டரி, இரண்டாவது ஒரிஜினல் சார்ஜர் பயன்படுத்தாதது. அதனால் எப்படி பேட்டரி வெடிக்கின்றது என்பதை பற்றியும், அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் பார்க்கலாம். பழைய பேட்டரிகள் ஸ்மார்ட்போன்களை வெடிகுண்டாக மாற்றும் காரணிகளில் பழைய பேட்டரிகள் தான் அதிக பங்காற்றுகின்றன. ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் தெர்மல் லித்தியம் பேட்டரிகள் அதிகளவில் சூடாக கூடியவை. இந்த வெப்பத்தை தடுக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிகளின் மீது பிரத்தியேக பாதுகாப்பு படலங்களை பொருத்துகிறார்கள். அதனால் ஒரிஜினல் பேட்டரிக்கள் பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால் இதே பாதுகாப்பை போலி மற்றும் பழைய பேட்டரிகளில் எதிர்பார்க்க முடியாது. அதனால் சார்ஜ் ஆகும் சமயத்தில் பேட்டரி அதிகளவில் சூடாகி ஆபத்தான வெடிகுண்டாக மாறிவிடுகிறது. அதிக வெப்பம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் இடத்தை பொறுத்தும், அவை வெடிகுண்டுகளாக மாறுகின்றன. பொதுவாக சூடான இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி சூடான இடங்களில் சார்ஜ் செய்தால் ஸ்மார்ட்போன்கள் மொத்தமாக பாதிக்கப்படும். ‘டச் ஸ்கிரீன், பேட்டரி, சார்ஜர், சர்க்யூட் போர்ட்’ என ஏதாவது ஒரு வழியில் கோளாறுகள் ஏற்படுவதுடன், சூடாகி வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சார்ஜ் ஏற்றும் போது பேச வேண்டாம்ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கின்றது என்றால், அது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரங்களில் வெப்பத்தை தாங்க முடியாத பேட்டரிகள், அதிக வெப்பத்தினால் வெடித்துவிடுகின்றன. எனவே சார்ஜ் ஏற்றும் பொழுது போனில் பேச கூடாது. அதுபோல் ஸ்மார்ட்போனை சார்ஜில் போட்டுவிட்டு ஹெட்போன் களில் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை பேட்டரியையும், சர்க்யூட் போர்ட்டையும் ஒருசேர சூடாக்குகிறது. உயர் மின் அழுத்த கோபுரங்கள் இவைமட்டுமின்றி ரெயில் நிலையங்களும், உயர் மின் அழுத்த கோபுரங்களும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகின்றன. இந்த முறையில் கேமரா பிளாஷ் மூலமாக ஸ்மார்ட்போன்கள் வெடிக்கின்றன. ஆரம்பத்தில் நம்ப தகுந்த காரணமாக இருந்தவை, ஜார்கண்ட், அரியானா போன்ற இடங்களில் நடந்த பிளாஷ் லைட் விபத்துகளால் உண்மையாகி உள்ளன.
ரெயில் நிலையங்களுக்கு மேல் அமைக்கப்பட்டிருக்கும் உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு அருகிலும், பிளாட்பாரத்தின் அருகிலும் நின்றுக்கொண்டு போட்டோ எடுக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் ஸ்மார்ட்போனில் இருந்து பிளாஷ் வெளிச்சம் பளிச்சிடும் போது, அருகில் பயணிக்கும் மின் அழுத்த மின்சாரம் ஸ்மார்ட்போன்களை வெடிக்க செய்துவிடுகின்றன.பெட்ரோல் பங்குகளில் வெடிக்கலாம் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பியபடியே போன் செய்வது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது, இணையதளத்தை சொடுக்குவது போன்ற எந்தவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபடாதீர்கள். ஏனெனில் இவை அனைத்துமே ஸ்மார்ட்போன்களை பயங்கரமான வெடிகுண்டாக மாற்றிவிடும். ஸ்மார்ட்போன்களில் இருந்து பரிமாறப்படும் அலைவரிசை அலைகள் பெட்ரோல் பங்குகளில் தீ விபத்தை ஏற்படுத்த கூடும். இதுபோன்ற ஏராளமான சம்பவங்களில் ஸ்மார்ட்போன்களுடன் பெட்ரோல் பங்குகள் வெடித்திருக் கின்றன. போலி சார்ஜர்போலி பேட்டரிகள் மட்டுமல்ல போலி சார்ஜர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து தான். அளவுக்கு மீறிய மின்சாரத்தை வழங்கினாலும் சரி..., குறைந்த மின்சக்தியை கொடுத்தாலும் சரி..., பேட்டரிகள் செயலிழந்து வெடிக்க தயாராகி விடும். சில போலி சார்ஜர்களில் ஸ்மார்ட்போன்கள் ரொம்பவும் மந்தமான முறையில் சார்ஜ் ஆகும். இதற்காக அதிக நேரம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதனால் பேட்டரிக்கள் சூடாவதுடன், சர்க்யூட் போர்ட்டையும் சூடாகி விடுகின்றன. இதனால் சர்க்யூட் போர்டில் ஏற்படும் சிறு..சிறு... வெடிப்பு, ஸ்மார்ட்போன் வெடிக்க காரணமாகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)