சிறப்பு மருத்துவ படிப்பு: அவகாசம் நீட்டிப்பு.


          உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளை முடித்தோ
ருக்கான, டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை,1க்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், 50 சதவீதம், மாநில அரசு டாக்டர்களுக்கும், 50 சதவீத இடங்கள், தமிழகத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிற டாக்டர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. அரசு டாக்டர்கள் அல்லாத, 50 சதவீத இடங்களுக்கான தமிழக ஒதுக்கீட்டை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இதில், அகில இந்திய அளவிலான டாக்டர்கள் விண்ணப்பிக்க அனுமதித்து உத்தரவிட்டது.இதையடுத்து, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை, மருத்துவக் கல்வி இயக்ககம்நீடித்துள்ளது. 'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, இம்மாதம், 5ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், அன்று மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முழுமையான சான்று மற்றும் ஆவணங்களை, 6ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்' என, அறிவித்துள்ளது.மேலும் விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்தாலும், நுழைவுத் தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி, ஜூலை, 10ம் தேதி நடக்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank