சட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் அறிவிப்பு.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து
ஆண்டு ஒருங்கிணைந்தபடிப்பாக நடத்தப்படுகிறது.
மொத்தம், 1,050 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, அம்பேத்கர் சட்டப்பல்கலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓ.சி., என்ற பொதுப்பிரிவினரின், 'கட் ஆப்' மதிப்பெண், 89.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு, 80.375; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், 76.125; மிக பிற்படுத்தப்பட்டோர், 79.875; பட்டியலினத்தவர், 81; அருந்ததியர், 78.250; பழங்குடியினருக்கு, 68.750 என, 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜூலை, 21ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்கி, 24ம் தேதி முடிகிறது. இதற்கான பட்டியல், பல்கலையின் http:/tndalu.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.