'பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு, ஜூலை, 11ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு ப
ணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொது சார்நிலை பணியில், 2014ம் ஆண்டிற்கான, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பணியில் அடங்கிய உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவியில், 270 காலியிடங்களுக்கு, 2015 ஜூலை, 11ல், எழுத்துத் தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்யப்பட்ட, 541 விண்ணப்பதாரர்களுக்கு, ஜூலை, 11 முதல், 14 வரை, நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் தேர்வுக்கு, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் நடக்கும் நாள், நேரம் ஆகிய விவரத்துடன், அழைப்பு கடிதம், விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை, தேர்வாணைய இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.