வீட்டுப் பாடத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற சிபிஎஸ்இ புதிய முயற்சி


           வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்மு
றையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குழந்தைகளின் வீட்டுப்பாடம் என்பது இன்றைய பெற்றோருக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தகூடிய ஒன்றாக அமைந்துவிடுகிறது. அதனால் பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளி முடிந்தவுடன் வரும் குழந்தைகளை சிறப்பு வகுப்புக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் செய்யும் முறையையே கற்று வருகின்றனர். இம்முறையை மாற்றி மாணவர்களின் வீட்டுப்பாடத்தில் சுவாரசியமான புதிய முறையை சிபிஎஸ்சி நிர்வாகம் அறிமுகப்படுத்திவுள்ளதுஇப்புதிய செயல்முறை திட்டமானது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தும் புதிய வீட்டுப்பாடத்திலுள்ள செயல்முறை பயிற்சிகள்:கடிதங்கள் எழுதுவது, புதிர்களை தீர்ப்பது, பெற்றோருடன் இணைந்து வீட்டு நிர்வாக கணக்குகளை கவனிப்பது, சமையல் செய்வது, செய்திதாள்கள் படிப்பது, ஆவணப் படங்கள் காண்பது வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போன்ற புதிய செயல்முறை பயிற்சிகளை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிபிஎஸ்இ நிர்வாகம் சமிபத்தில் வெளியிட்ட 318 பக்கங்கள் உள்ளடக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:இப்புதிய முறையை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டும் என சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் வலியுறுத்துகிறது.வீட்டுக் கணக்குகளை பெற்றோர்கள், குழந்தைகளுடன் இணைந்து செய்யும்போது அப்பயிற்சி மாணவர்களுக்கு கணக்குப் பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.செய்தித்தாள்கள் மற்றும் செய்தி சேனல்களை மாணவர்கள் காணும் போது சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும். அதற்கான தீர்வுகளை மாணவர்கள் எடுக்கும் வகையில் அவர்களை செம்மைபடுத்தும்.சிபிஎஸ்இ இப்புதிய செயல்முறை வீட்டுப்பாடத் திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடமிருந்து இருவேறு பதில்கள் கிடைத்துள்ளது.

புதிய வீட்டுப்பாட செயல்முறை குறித்து  மாணவர்கள் கூறும்போது, இப்புதிய வீட்டுப்பாடம்திட்டம் மூலம் சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறினர்.ஆனால், சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பழைய வீட்டுப்பாடத் திட்டத்திற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.கிழக்கு பெங்களூரூரில் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் ஆசிரியர் மணிலால் கார்வால்ஹோவை கூறும்போது,”பெற்றோர்கள் பழைய வீட்டுப்பாடத் திட்டத்தையே விரும்புகின்றனர். எனவே, கட்டுப்பாடுகள்நிறைந்த பழைய வீட்டுப்பாட்ட திட்டம் அவசியம் தேவை" என்றார்.

கோரமங்கலத்தில் அமைந்துள்ள தேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்னா நாயர் கூறுகையில், ”இப்புதிய வீட்டுபாடத்திட்டம் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு உகந்ததாக உள்ளது. ஆனால் மேல்நிலை மாணவர்கள் இன்னும் தேர்வு முறையை நோக்கியே உள்ளனர். என்னைப் பொருத்தவரைவிட்டுப்பாடம் என்பது புதிய செய்முறை திட்ட்த்துடன் பழைய விட்டுப்பாட முறையும் கலந்து சமநிலையாக இருக்க வேண்டும்”. என்றார்.

இப்புதிய செய்முறை வீட்டுப்படம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வீட்டுப்பாடம் என்பது அர்த்தமுள்ளதாகவும் அதே சமயத்தில் ஆர்வமுடையாதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank