ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது: கல்வித்துறை உத்தரவு.
ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது என வேலூர்மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிக
ளில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணி செய்வதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட கிளை சார்பில் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதுகுறித்த செய்தியும் சிறப்புக் கட்டுரையாக பிரசுரமானது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைக் கடிதத்தின் விவரம்:தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கோரிக்கை மனுவில் மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வேலை நேரத்தில் அலுவலகம் வருவதைத் தவிர்க்குமாறும், மேலும், அலுவலகப் பணி மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் மாதனூர் உதவி, கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அந்த செயல்முறைக் கடித்ததின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.