அரசு பணி தேர்வில் தேறியோருக்கு நடத்தை சான்றிதழ் அவசியமில்லை
'அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை அனுப்ப, அவர்களின் நடத்தை சான்றிதழுக்காக, காத்திருக்க தேவையில்லை' என, மத்திய அரசு தெரிவித்து
ள்ளது.
அரசு பணியாளர் தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, அவர்களது நடத்தை குறித்து, போலீஸ் சான்றிதழ் அளித்த பின்தான், அவர்களுக்கு பணி நியமன ஆணை அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், பணி நியமன கடிதம் அனுப்புவதற்கு, இரண்டு முதல் ஆறு மாதம் வரை, கால தாமதம் ஆகிறது. இந்நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை அனுப்ப, நடத்தை சான்றிதழுக்காக காத்திருக்க தேவையில்லை.
சம்பந்தப்பட்டவரிடமிருந்து, சுயசான்றிதழ் பெற்றால் போதுமானது. இதில், தவறு இருப்பது தெரிந்தாலோ, பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அவர், பணியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.