"பிற்படுத்தப்பட்ட பிரிவு கல்லூரி மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் கல்லூரி மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். அரசு இணையதளமான www.tn.gov.inbcmbcdept-apYk என்ற முகவரியிலும் உதவித்தொகை குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.