பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கில மொழி: பயிற்சிக்கு முன்பதிவு செய்ய அழைப்பு.


          பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையத்தில் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள ஆங்கில மொழி பயிற்சிக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சிலில் 16
வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உகந்த பயிற்சிகளாக பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல்,வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை வழங்கப் படுகின்றன.

முதலில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி,விரும்பிய நேரம் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.அதேபோல இளம் வயதின ருக்கான பயிற்சி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இளம் சாதனை யாளர்கள் பயிற்சி (7 முதல் 15 வயது வரை), பேசும், சரியாக எழுதும் பயிற்சி (11 முதல் 15 வயது வரை) அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 01204569000, 01206684353 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். Winya.Suzanna@in.britishcouncil.org என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம். அல்லது English என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)