பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் படித்த மாணவ, மாணவியருக்கு, திடீரென கல்லுாரிகளில் சுதந்திரம் கிடைப்பதால், பல்வேறு பிரச்னைகளும், வேறுபாடுகள் ஏற்படுகின்றன
. இதில், மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கும் கல்லுாரிகளில், 'ராகிங், ஈவ் டீசிங்' போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.
புதிய கல்வி ஆண்டு பிறந்து, கலை கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்லுாரிகளும், வரும் வாரம் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், மாணவ, மாணவியர் இடையில் பிரச்னை ஏற்படாமல், இரு பாலினத்தவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மாணவர், மாணவியர் இணைந்து குழுக்கள் அமைத்தல், பேரணி நடத்துதல், விழா நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.