ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு

TRB:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

       ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

          மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 விரிவுரையாளர், இளநிலை விரிவு ரையாளர், முதுநிலை விரிவு ரையாளர் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 15-ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் டி.உமா ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் (எஸ்எஸ்எல்சி சான்று தொடங்கி எம்எட் வரை) சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு சான்றிதழ்களை சமர்ப்பிப்பவர்கள் பணிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுவராத நபர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.எழுத்துத் தேர்வு முடிந்து 5 வேலை நாட்களுக்குள் உத்தேசவிடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப் படும். அதில் ஏதேனும் தவறு இருந் தால் அதற்கான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் சமர்ப் பிக்கவேண்டும். அது குறித்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசித் துவிட்டு இறுதி விடைகள் வெளியி டப்படும். அதுவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank