தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இங்கு பிட்டர், எலக்டீரிசியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக் போன்ற பொறியியல் தொழிற்பிரிவுகளிலும், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெய்லர் போன்ற பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 30,000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை வழங்கினார்.