லோக்சபாவில் பட்டதாரிகளுக்கு பயிற்சி விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அறிவிப்பு
' லோக்சபாவில், பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கான கள பயிற்சியான, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியை பெற விண்ணப்பம் அளிக்கலாம்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை வந்துள்ளது.லோக்சபாவில், மாணவர்கள் மற்றும் பட்டதா
ரிகளுக்கு, மாத ஊக்க ஊதியத்துடன் கூடிய, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கப்படுகிறது.
'இந்த ஆண்டுக்கான பயிற்சிக்கு, கல்லுாரி முதல்வர்களின் கடிதம் பெற்று, லோக்சபா சபாநாயகரின் இணை செயலருக்கு அனுப்பலாம்' என, கல்லுாரிகளுக்கு லோக்சபா சபாநாயகர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.விண்ணப்பங்களை, 'இயக்குனர், பீரோ ஆப் பார்லிமென்ட் ஸ்டடிஸ் அண்டு டிரெய்னிங், லோக்சபா செயலகம், அறை எண், எப்.0706, பார்லிமென்ட் நுாலக கட்டடம், புதுடில்லி - 110001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மூன்று மாத, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய்; ஒரு மாத பயிற்சிக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.நிதி, நிர்வாகம், மொழி, சட்டம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் உள்ளிட்ட, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் முடித்து, 30 வயதுக்கு உட்பட்டவர்கள், மூன்று மாத பயிற்சியில் சேரலாம்.
டிச., 1 முதல், பிப்., 28 வரை பயிற்சி நாட்கள்.ஒரு மாத, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்கு, 18 வயதில் இருந்து,30 வயதுக்குள் இருக்கலாம். கல்லுாரி மாணவர் அல்லது பட்டம் முடித்து முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்திருக்கலாம்.டிச., 14 முதல் ஜன., 13 வரை பயிற்சி நாட்கள். எம்.பி.,க்களிடம் பேசவும், பார்லிமென்ட் பணிகளில் பங்கேற்கவும் இந்த பயிற்சியில் வாய்ப்பு தரப்படுகிறது.இரண்டு வித பயிற்சியிலும், தலா, 25 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.