திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு:

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
         பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அ
வரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது.என் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரியஇறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்கஇடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங் குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது.இந்தச் சட்டப்படி பெற்றோ ர்களை பராமரிப்பது மகன், மகள்களின் கடமையாகும். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் மகன், மகளிடம் இருந்து நிதி உதவி பெறுவது அவர்களின் உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை அதிகாரிகள் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி வழங்க மறுக்கக்கூடாது. பணிப்பதிவேட்டில் வாரிசுதாரர் பட்டியலில் பெயர் இல்லா விட்டாலும் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் இறுதி பணப்பலன்களில் அவரது தாயாருக்கும் பங்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம்கருதுகிறது. எனவே மனுதாரரின் மருமகளுக்கு பணப்பலன்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக கணக்காயர் ஜெனரல், ராமநாதபுரம் ஆட்சியர், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஜூலை 26-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)