உள்ளாட்சி தேர்தல் சட்டத்திருத்தம் : தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டசட்டத்திருத்தம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்
, அக்., 24ம் தேதிக்குள் நடந்தாக வேண்டும்.
2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், வார்டுகளை நிர்ணயம் செய்வது, கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், தற்போதுள்ள எல்லை மற்றும் வார்டுகள் அடிப்படையில், தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.மாநகராட்சிகளில் மேயருக்கு, மாநகர உறுப்பினர்கள் ஆதரவுஇல்லாததால், மாநகராட்சிகள் முறையாக செயல்படுவதில்லை என்று, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, நேரடி மேயர் தேர்தலை ரத்து செய்து விட்டு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் மூலம், மேயரை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர, அரசு முடிவு செய்தது.இதற்காக, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்திருத்தம் விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது.